1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sasikala
Last Modified: ஞாயிறு, 13 செப்டம்பர் 2020 (04:00 IST)

இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் !! - 13/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்.

1. ரிஷபம்:
 
இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும்.
 
2. மிதுனம்:
 
இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும்.
 
3. தனுசு:
 
இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு எதிலும் கூடுதல் கவனம் தேவை. எந்த பிரச்சனைகள் வந்தாலும், எதிர்த்து சமாளிக்க வேண்டி வரும். வீண்கவலை ஏற்பட்டு  நீங்கும். உடல் ஆரோக்கியம் ஏற்படும்.
 
4. மகரம்:
 
இன்று மகர ராசிக்காரர்களுக்கு உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் இருந்தாலும் வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
 
5. கும்பம்:
 
இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு ஏற்படும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும்.
 
6. மீனம்:
 
இன்று மீன ராசிக்காரர்களுக்கு கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபம் உண்டாகும். சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர்  பயணங்களும், பணவரத்தில் தாமதமும் இருக்கும்.