மெனோபாஸ் காலத்தில் பெண்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள் என்ன...?
பெண்கள் மெனோபாஸ் ஏற்படும்போது அவர்கள் பல உடல், மன உளைச்சலுக்கு உள்படுகின்றார்கள். மெனோபாஸ் நிகழும்போது இனபெருக்க உறுப்புகள் செயல்லிழக்கப் படுவதோடு அதனோடு தொடர்புடைய ஹோமோன் சுரப்புகளும் நிறுத்தப் பெறுகின்றன.
ஒரு பெண் வயதிற்கு வரும்போது மாதவிடாய் ஆரம்பிக்கின்றது. மெனோபாஸின்போது மாதாவிடாய் நிறுத்தம் பெறுகின்றது. பூப்பெய்திய காலம் முதல் மெனோபாஸ் ஆகும் வரையும் உள்ள காலமே பெண்களின் பொற்காலம் என்றும் கூறலாம்.
எனவே மெனோபாஸ் என்பது பூப்பெய்தல் போன்ற ஆனால், எதிர்மாறான ஒரு பருவ மாற்றம்மட்டும்தான். இதை எதிர் கொள்ள பயப்பட வேண்டியதில்லை. இது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் கட்டாயம் ஏற்படக் கூடியது.
நம்மில் பல பெண்களுக்கு, மெனோபாஸ் எந்தெந்த விசயங்களில் கவனமாக இருக்கவேண்டும். ஒரு பெண் மெனோபாஸ் ஸ்டேஜை நோக்கிப் போகும் போது அவளுக்கு ஏற்படும் அசௌகர்யங்கள் பற்றி பார்ப்போம்.
மெனோபாஸ் சமயத்தில் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள்: மெனோபாஸ் சமயத்தில் ஏ.ஸி.யில் இருக்கும் போதும் நடுத்தர வயதுப் பெண்களுக்கு வேர்த்துக் கொட்டும்.
இரவில் திடீரென வியர்த்துக் கொட்டும். மிகவும் படபடப்போடு காணப் படுவார்கள். இதனால் அமைதியான தூக்கம் போய், ஒரு வித சோர்வுக்கு ஆளாவார்கள். அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை, விரக்தி என்று எல்லா உணர்ச்சிகளும் மாறி மாறி வரும்.
ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் குறைவால், வெஜைனாவின் பாதையை வழுவழுப்பாக வைத்திருக்கும் சுரப்புகள் குறைய ஆரம்பிக்கும். இதனால் வெஜைனா (பெண் உறுப்பு) உலர்ந்து போகும். அதனால் (பெண் உறுப்பு) உலர்ந்து போய், தாம்பத்திய உறவின் போது அசௌகர்யமும், வலியும் உண்டாகலாம்.
தவிர, வெஜைனா பாதையில் வழுவழுப்பு ஏற்படுத்தும் இந்த திரவம் தான், அந்தப் பகுதியின் மென்மையான திசுக்களில், இன்ஃபெக்ஷன் ஏற்படாமல் தடுக்கிறது. ஈஸ்ட்ரஜன் குறைவால் இந்த சுரப்பும் குறையும் போது அங்கே இன்ஃபெக்ஷன் ஏற்பட ஏதுவாகிறது.
பல பெண்களுக்கு எலும்புகள் தேய்ந்து போகலாம். அதனால் எலும்புத் தேய்மானத்திற்கு அவர்கள் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டால், இத்தகைய பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.