வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 17 மார்ச் 2017 (04:27 IST)

இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டு பிரிவுகளாக பிரிந்தது. சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டு பிரிவாக இருக்கும் இந்த அணிகள் தனித்தனியாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திக்கின்றன. இந்த தேர்தலில் ஒன்றுபட்ட அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற இரு அணிகளும் முயற்சித்து வருகின்றன. இந்த சின்னம் யாருக்கு என்பது தற்போது தேர்தல் ஆணையத்தின் கையில்தான் உள்ளது.





இந்நிலையில் தேர்தல் ஆணையம் பல விஷயங்களை ஆராய வேண்டிய நிலையில் உள்ளது. ஒரு கட்சி இரண்டாக பிரிந்தால் எந்த பிரிவுக்கு அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், கட்சியின் நிர்வாகிகள் பெரும்பான்மை இருக்கின்றதோ அந்த கட்சிக்கு சின்னத்தையும், இன்னொரு பிரிவை தனிக்கட்சியாகவும் அறிவிக்கும்.

ஆனால் இந்த பெரும்பான்மையில் இழுபறி நிலை ஏற்பட்டால் கட்சி சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்க வாய்ப்பு இருக்கின்றது. இந்நிலையில் அதிமுகவை பொருத்தவரையில் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்க வாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகிறது.