1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 3 மார்ச் 2017 (22:30 IST)

தமிழக உள்துறைச் செயலாளர் அதிரடி மாற்றம்

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றவுடன் முதல்முறையாக முக்கிய அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி தமிழக உள்துறை செயலாளராக இருந்த அபூர்வ வர்மா அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார்.


 


அபூர்வ வர்மாவுக்கு பதிலாக தமிழகத்தின் புதிய உள்துறைச் செயலாளராக நிரஞ்சன் மார்டி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே கடந்த 2013-ம் ஆண்டு தமிழக உள்துறைச் செயலாளராக பணியாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உள்துறைச் செயலாளராக இருந்த அபூர்வ வர்மா சுற்றுலாத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழக நிர்வாக இயக்குநராக உமாநாத் என்பவர் நியமனம் செய்யப்படுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு சிறுதொழில் நிறுவன மேம்பாட்டுக் கழக இயக்குநராக செல்வி அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.