விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த செங்கோட்டையன்... அரசியல் பரபர...
sengottaiyan
அதிமுகவில் 40 வருடங்களுக்கு மேல் பயணித்து செங்கோட்டையன் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைகிறார் என்பதுதான் கடந்த இரண்டு நாட்களாகவே தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும், பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று சொல்லி அதற்காக கெடு விதித்தார் செங்கோட்டையன். இதனால் கோபமடைந்த எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து நீக்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்திற்கு வந்தார் செங்கோட்டையன். அவரோடு அவரின் ஆதரவாளர்களும் வந்தார்கள். அதன்பின் அவர் விஜயின் முன்னிலையில் தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டார். அவருக்கு விஜய் அடையாள அட்டை கொடுப்பதோடு அவருக்கு இன்று புதிய பதிவியை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
