செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By bala
Last Modified: திங்கள், 19 ஜூன் 2017 (13:19 IST)

ரஜினிகாந்த் தனிக்கட்சிதான் தொடங்குவார்- அர்ஜூன் சம்பத் கணிப்பு

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சிதான் தொடங்குவார் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.



இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட கட்சிப் பிரமுகர்கள் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு இன்று காலை சென்றனர். அங்கு ரஜினியுடன் சுமார் 45 நிமிடங்கள் பேசினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜுன் சம்பத் பேசியபோது,


எனது கணிப்புப்படி ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார். அரசியலுக்கு வருவதற்கான தயாரிப்புகளை முழு அளவில் அவர் செய்து வருகிறார். நாங்கள் ரஜினியை சந்தித்து அவர் அரசியலுக்கு வந்தால் துணை நிற்போம். மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்குவோம் என்று எங்கள் ஆதரவைத் தெரிவித்தோம். தமிழக நலன்களுக்காக எந்தெந்த நேரத்தில் குரல் கொடுக்க வேண்டுமோ அந்தந்த நேரத்தில் எல்லாம் ரஜினி குரல் கொடுத்துள்ளார்.

1996ல் ஆண்டவனே வந்தாலும் காப்பாற்ற முடியாது என்கிற கருத்தை தெரிவித்து ஒரு கூட்டணியை உருவாக்கி ஆட்சி மாற்றத்திற்கு வித்திட்டவர் ரஜினி. அவர் நிச்சயமாக அரசியலுக்கு வர வேண்டிய தருணம் இது. அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் தனிக்கட்சிதான் தொடங்குவார் என்று கூறினார்.