திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 21 ஜூலை 2017 (06:07 IST)

ஓட்டு போடும் ஒவ்வொருவருக்கும் கேள்வி கேட்க உரிமை உண்டு. ஜிகே மணி

ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என்றபோது எதிர்த்தவர்கள் பலர், கமல் அரசியலுக்கு வரப்போகிறார் என்றவுடன் அவருக்கு ஆதரவு அளிப்பது பெரும் ஆச்சரியத்டை தந்து கொண்டிருக்கின்றது.



 
 
ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என்றவுடன் அவர் கன்னடர் அரசியலுக்கு வரக்கூடாது என்று எதிர்த்த 'நாம் தமிழர்' கட்சியின் சீமான், கமல் குறித்து இன்னும் கருத்து சொல்லாமல் இருக்கின்றார்.
 
அதேபோல் ரஜினியுடன் பல வருடங்களாக மோதல் போக்கை கடைபிடிக்கும் கட்சி பாமக. இந்த கட்சி கமலுக்கு தற்போது ஆதரவு கொடுத்துள்ளது. இக்கட்சியின் தலைவர் ஜிகே மணி சமீபத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, 'தமிழகத்தில் வாக்களித்த, வாக்களிக்கும் உரிமையுள்ள யாரும் இந்த அரசை எதிர்த்து கேள்வி கேட்கலாம். தவறுகளை சுட்டிக் காட்டலாம். அதற்கு, மக்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அந்த வகையில், கமல் இந்த ஆட்சியை விமர்சித்ததில் எந்த தவறும் இல்லை. அதற்கு, நாகரீகமாக இந்த ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் பதில் அளிப்பதை விட்டுவிட்டு, கமலிடம் மிரட்டலாக, நாகரீகம் அற்ற வார்த்தைகளில் பேசுவது தவறு. கமலை அப்படி பேசத்தான் அமைச்சர்களுக்கு உரிமையில்லை" என்று கூறினார்.