வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 12 மே 2017 (07:27 IST)

இரு அணி இணைப்பு வாய்ப்பே இல்லை! ஓபிஎஸ் உற்சாகம் ஏன்?

அதிமுகவின் இரு அணி இணைப்பு பேச்சுவார்த்தை குறித்து அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தாலும் இனிமேல் இரு அணிகளின் இணைப்பு சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. இதற்கும் காரணம் பாஜக தான் என்று அரசியல் வதந்திகள் பரவி வருகிறது.



 


ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத களத்தில் குதித்து எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று காய் நகர்த்தி வரும் பாஜக, ஓபிஎஸ் அணியை முழுமையாக ஆதரிக்க முடிவு செய்துவிட்டது. மேலும் எடப்பாடி அணியில் இணைந்தால் ஓபிஎஸ்-க்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு குறையும் என்று கூறும் கருத்தையும் ஓபிஎஸ் ஏற்றுக்கொண்டது.

இந்த நிலையில் தனித்தே செயல்படுங்கள், தேர்தல் நேரத்தில் இணைந்து செயல்படலாம் என ஓபிஎஸ் அணிக்கு பாஜக மேலிடம் பச்சைக்கொடி காட்டிவிட்டதால் ஓபிஎஸ் உற்சாகமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் எடப்பாடி அணியின் ஆட்சி கவிழும் என்றே பாஜக பிரமுகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது