டிடிவி தினகரன் அணியில் மேலும் ஒரு எம்.எல்.ஏ: மொத்த எண்ணிக்கை 35 ஆனது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என இரண்டு பிரிவாக இருந்த நிலையில் சசிகலா மேலும் உடைந்து ஈபிஎஸ் அணி மற்றும் தினகரன் அணி என இரண்டானது. சசிகலா அணியின் 122 எம்.எல்.ஏக்களில் 34 பேர் தினகரன் அணியில் இருந்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு எம்.எல்.ஏ தினகரன் அணிக்கு தாவியுள்ளார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ தென்னரசு நேற்று திடீரென டிடிவி தினகரனைச் சந்தித்து தனது ஆதரவு தெரிவித்துள்ளார். இவர் ஈபிஎஸ் அணியில் இருந்து கொண்டு அமைச்சர் பதவி கேட்டதாகவும், அது கிடைக்காததால் அணி மாறியதாகவும் கூறப்படுகிறது.
தினகரன் அணியில் 35 பேர் இருந்தாலும் ஈபிஎஸ் அவர்கள் தலைமையிலான ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் இப்போதைக்கு ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.