புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 20 நவம்பர் 2017 (07:31 IST)

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு காங்கிரஸ் ஆதரவாளர் இருக்கிறார்: குஷ்பூ

அன்னை இந்திராகாந்தியின் 100வது பிறந்த நாள் விழா நேற்று சென்னையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


 


தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு காங்கிரஸ் ஆதரவாளர் இருக்கின்றார்கள். அவர்களிடம் பேசி எழுப்ப வேண்டியது காங்கிரஸ் தொண்டர்களின் கடமை தற்போது தமிழகத்தில் நடந்து வரும் ஜோக்கர் ஆட்சியை பார்த்து பிற மாநில தலைவர்களும், மக்களும் சிரிக்கின்றனர். வடிவேலு காமெடி போல் பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக் என்ற அளவில் தான் இந்த ஆட்சி இருக்கின்றது என்றும் குஷ்பு தெரிவித்தார்

இந்த விழாவில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொள்ளவில்லை என்பதும், இந்த விழாவிற்காக அடிக்கப்பட்ட போஸ்டரில் கூட அவரது பெயரோ அல்லது புகைப்படமோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது