1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 22 மே 2017 (06:25 IST)

நடிகை கஸ்தூரிக்கு சிவப்பு விளக்கா? விதி யாரை விட்டது?

ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தமிழக அரசியல் களத்தில் எளிதில் வெற்றி வாகை சூடிவிடலாம் என்ற கனவில் பல வருடங்களாக கட்சி நடத்தி வந்த சிறிய கட்சியின் தலைவர்களுக்கு இடியாய் இறங்கியது ரஜினியின் அரசியல் அறிவிப்பு. ரஜினியின் அரசியல் வருகையால் அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் சின்ன சின்ன கட்சிகள் காணாமல் போய்விடும் வாய்ப்புகள் இருப்பதால் தான் அந்த கட்சியின் தலைவர்கள் ரஜினியின் அரசியல் வருகையை இப்போதே கடுமையாக எதிர்க்கின்றனர்.



 


இந்த நிலையில்தான் ஒரு குறிப்பிட்ட சமூகம் ரஜினிக்கு எதிராக கஸ்தூரியை தூண்டிவிடுவதாக வதந்திகள் பரவி வருகிறது. இத்தனை வருடங்கள் ஜெயலலிதா, கருணாநிதியை எதிர்த்து அரசியல் பண்ணிய நாம், அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் ரஜினி குறுக்கே புகுந்து ஆட்டையை கலைப்பார் என்று அவர்கள் நினைத்து கூட பார்க்க வில்லை

எனவே கடந்த சில மாதங்களாகவே அரசியலுக்கு அடித்தளம் போடும் வகையில் பேசி வரும் கஸ்தூரியை பயன்படுத்த சில அரசியல்வாதிகள் முடிவு செய்துள்ளதாகவும், அதன் தாக்கமே ரஜினிக்கு எதிரான போர், அக்கப்போர் என கஸ்தூரியின் டுவீட் என்றும் கூறப்படுகிறது. தீபா புருசனெல்லாம் முதல்வர் கனவில் மிதக்கும்போது சத்யாராஜிடம் அல்வா வாங்கிய கஸ்தூரியும் சிவப்பு விளக்கு சுழலும் காரில் வரவேண்டும் என்ற விதி இருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்?