1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2017 (22:56 IST)

கமல்ஹாசனின் மற்றொரு புரியாத டுவீட்

உலக நாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கிட்டத்தட்ட ஒவ்வொரு இரவிலும் ஒரு அரசியல் பரபரப்பு கருத்தை அவர் தெரிவித்து வரும் நிலையில் இன்றைய இரவில் அவர் தெரிவித்த கருத்து இதுதான்



 
 
பாரதி போய் 96 ஆண்டுகளாயிற்று.கவிதையையே பொதுவுடமையாக்கி கல்லாத் தமிழர்க்கும் செவிவழி விதை தூவிய அந்த விவசாயி வம்சம், இனியேனும் விதி செய்யுமா?
 
புரட்சி என்னும் விதையை பாரதி பொதுமக்களின் மனதில் தூவியுள்ளார். ஆனால் 96 வருடங்கள் ஆகியும் இன்னும் புரட்சி என்னும் செடி முளைக்கவில்லை. இனியேனும் ஏதாவது நல்லது நடக்குமா? என்பதுதான் அவர் கூற வந்த செய்தியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது
 
கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் முதலில் கவரவேண்டியது பாமர ஜனங்களைத்தான்/. ஏனெனில் அவர்கள் தான் வரிசையில் நின்று ஓட்டு போடுவார்கள். எனவே அவர்களுக்கு புரியும் வகையில் முதலில் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாய் உள்ளது. உங்களது தமிழ் மேதாவித்தனத்தை உங்களை போன்ற மேதாவியிடம் மட்டுமே தயவு செய்து காட்டி கொள்ளுங்கள் என்று பலர் அவருடைய டுவிட்டுக்கு பதிலளித்துள்ளனர்.