வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 27 ஜூலை 2017 (00:59 IST)

கமல்ஹாசனை வைத்து அரசியல் செய்கிறதா திமுக?

அதிமுக அரசு மீதும் அமைச்சர்கள் மீதும் அதிரடி குற்றச்சாட்டுக்களை கமல் கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயம் கமல் அரசியலுக்கு வருவதற்கே வாய்ப்பு உண்டு என்று பலர் கூறுகின்றனர்.



 
 
ஆனால் கமல் அரசியலுக்கு வரமாட்டார் என்றே அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் அவர் அரசியல் செய்வதை நிறுத்தப்போவதில்லை என்பது நிச்சயமாக தெரிகிறது
 
ஆதாரம் இருக்கின்றதா? என்று அமைச்சர்கள் கூறியதும் ஆதாரத்தை அனுப்புங்கள் என்று கமல் தனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் இது பெரியதாக பயனளிக்கவில்லை
 
இந்த நிலையில் கமலை வைத்து அரசியல் செய்ய விரும்பு திமுக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பொதுப்பணித்துறை குறித்த ஒரு பெரிய ஊழலை கமலிடம் ஆதாரத்துடன் விளக்கியுள்ளதாம். திமுக குற்றம் சாட்டினால் அது வேறு விதமாக இருக்கும், ஆனால் கமல் போன்ற நடுநிலையாளர்கள் கூறினால் அதற்கு சக்தி அதிகம் என்பதால் இந்த ஏற்பாடாம். கமல் எப்போது அந்த ஆதாரத்தை உடைக்க போகிறார் என்பதுதான் தற்போது பெரிய சஸ்பென்ஸாக உள்ளது.