செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 16 டிசம்பர் 2016 (16:43 IST)

ஜெ.வின் சிட் பண்ட் வாரிசு சசிகலாதான்; இதுபோதும் எங்கள் சின்னம்மாவிற்கு: பொன்னையன்

ஜெயலலிதாவின் அடுத்த வாரிசு சசிகலா தான் என்பதற்கான ஆதாரத்தை அதிமுகவின் செய்தி தொடர்பாளர் பொன்னையன் வெளியிட்டுள்ளார்.


 

 
ஸ்ரீராம் சிட்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் ஜெயலலிதா 1991 ஆம் ஆண்டு ரூ.7 லட்சம் முதலீடு செய்துள்ளார். அதற்கு நிதி சேமிப்பு வாரிசாக சசிகலா பெயரை குறிப்பிட்டுள்ளார். இதை ஆதரமாக வைத்துக்கொண்டு சசிகலாதான் ஜெயலலிதாவின் அடுத்த வாரிசு என்று அதிமுகவின் செய்தி தொடர்பாளர் பொன்னயன் கூறியுள்ளார்.
 
பத்திரிக்கையாளர்களை சந்தித்த அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் கூறியதாவது:-
 
சசிகலாதான் அடுத்த வாரிசு என்று அன்றே அம்மா மனதில் தீட்டி செயலில் காட்டியுள்ளார். 7 லட்சம் ரூபாய் முதலீடுக்கு சசிகலாவை நிதி சேமிப்பு வாரிசாக குறிப்பிட்டுள்ளார். அதன்படி சின்னம்மாவே அதிமுகவின் அடுத்த வாரிசு. அதிமுக கட்சியின் செயல்பாடுகள் அனைத்து சசிகலாவுக்கு விவரமாக தெரியும். எனவே அவரை பொதுச் செயலாளாராக நியமிக்க எந்த தடையும் இல்லை, என்றார்.