ஞாயிறு, 14 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (15:30 IST)

ஸ்டாலினால் அது முடியாது ஆனால் கருணாநிதி முடித்திருப்பார்: விஜயகாந்த்

ஸ்டாலினால் அது முடியாது ஆனால் கருணாநிதி முடித்திருப்பார்: விஜயகாந்த்
கருணாநிதி மட்டும் தீவிர அரசியலில் இருந்திருந்தால் நிச்சயமாக ஆட்சியை கவிழ்த்து இருப்பார் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


 

 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தற்போதைய தமிழக அரசியல் சூழல் கூறியதாவது:-
 
தமிழக அரசியல் சூழல் மிகவும் மோசமாக உள்ளது. ஆட்சியில் இருப்பவர்கள் ஆட்சியை தக்க வைப்பது பற்றியே சிந்தித்து கொண்டிருக்கிறார்கள். மாநிலத்தில் நடப்பது பற்றியோ, மக்களை பற்றியோ அவர்கள் கவலைப்படவில்லை. மு.க.ஸ்டானிலோ, பன்னீர்செல்வத்தினாலோ இந்த அரசை வீழ்த்த முடியாது. கருணாநிதி மட்டும் தீவிர அரசியலில் இருந்திருந்தால் நிச்சயமாக இதை செய்து இருப்பார் என்றார்.
 
மேலும் ரஜினி, கமல் ஆகியோர் குறித்தும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.