தர்மத்தைப் பற்றி பேசி அதர்மத்தைச் செய்தால்... வசனங்களை தெறிக்கவிடும் ஈபிஎஸ்!!
சில நாட்களுக்கு முன்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்துக்கு எடப்பாடி பழனிச்சாமி மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.
பொதுக்கூட்டத்தில் பன்னீர் செல்லவம், நான் பார்த்து வளர்ந்தவர் பழனிசாமி. அவர் வந்து எனக்கு நிதியமைச்சர் பதவி தருகிறேன் என்பது சிரிப்பாக உள்ளது என்று கூறினார்.
இந்நிலையில், ஊட்டி பூங்காவில் மலர் கண்காட்சியை தொடங்கிவைத்து விட்டு எடப்பாடி பழனிச்சாமி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது, என்னை யாரோ சிலர் கட்சியில் வளர்த்தார்களாம், ஆனால் நான் யாராலும் கட்சியில் வளர்க்கப்படவில்லை. 1974 ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சியின் போது கட்சியில் சேர்ந்தேன்.
1985-ல் ஜெ.பேரவை செயலாளராக நியமிக்கப்பட்டேன். 1989-ல் சேவல் சின்னத்தில் நின்று எடப்பாடி எம்எல்ஏ-வானேன். மீண்டும் 1991-ல் எம்எல்ஏ பதவியும், 1998-ல் திருச்செங்கோடு எம்பி பதவியும் வகித்தேன்.
பின்னர், ஜெயலலிதா தலைமையில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றினேன். தற்போது முதலமைச்சராக இருப்பதற்கு நான் படிப்படியாக உயர்ந்தே காரணம் என ஆவேசமாக பேசினார்.
மேலும், இறுதியில் ஒரு கதையை குறிப்பிட்டு `தர்மத்தைப் பற்றிய பேசுகிறவர்கள் அதர்மத்தைச் செய்தால், மக்கள் கதாயுதம் வடிவத்தில் வந்து பாடம் கற்பிப்பார்கள்’ என்று ஓபிஎஸ்-ஐ மறைமுகமாக தாக்கினார்.