Last Updated : செவ்வாய், 14 மார்ச் 2017 (16:26 IST)
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ; தீபாவின் விருப்பம் சேவல் சின்னம்?
விரைவில் நடக்கவுள்ள ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ஜெ.வின் அண்ணன் மகள் தீபா சேவல் சின்னத்தை பெற முயற்சி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெ.வின் மறைவிற்கு பின் ஆர்.கே.நகர் தொகுதி தற்போது காலியாக இருக்கிறது. இந்த தேர்தலில், அதிமுகவின் சின்னமான இரட்டை இலையில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில், இரட்டை இலை எங்களுக்கே சொந்தம் என ஓ.பி.எஸ் அணி மற்றும் சுதாகரன் அணி ஆகிய இரண்டு அணிகளும் கூறி வருகிறது. இதில் தீபா எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் அவர் சேவல் சின்னத்தை குறி வைத்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பின் அதிமுக இரண்டாக உடைந்த போது, இரட்டை இலை சின்னம் யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. எனவே, எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி இரட்டைப்புறா சின்னத்திலும், ஜெயலலிதா, சேவல் சின்னத்திலும் போட்டியிட்டனர். எனவே, செண்டிமெண்ட்டாக, அதே சின்னத்தை தேர்தல் கமிஷனிடம் கேட்டுப் பெறும் எண்ணத்தில் தீபா இருப்பதாக தெரிகிறது.
எவ்வளவு முயன்றும் சேவல் சின்னம் கிடைக்கவில்லை எனில் மட்டுமே, அடுத்த சின்னம் பற்றி அவர் யோசிப்பார் என தீபாவின் ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.