திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By bala
Last Modified: வியாழன், 19 ஜனவரி 2017 (14:21 IST)

தீபாவின் புதிய கட்சிக்கு பெயர் என்ன தெரியுமா?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இதற்கு அதிமுகவில் ஒருசிலரை தவிர பெரும்பாலோனோர் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை தலைமையேற்குமாறும் கூறிவருகின்றனர். தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் குவிந்த தொண்டர்கள், அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.


 

இந்நிலையில் கடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் அன்று தனது அரசியல் பிரவேசத்தை தீபா உறுதி செய்தார். கட்சி குறித்த மற்ற விபரங்களை ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி அன்று வெளியிடுவதாக அறிவித்தார்.

இது குறித்து தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் சுதர்சன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக தொண்டர்கள் பலர் சசிகலா மீது அதிருப்தியில் உள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தலைமை ஏற்கவேண்டும் என்று கோரிக்கைகள் விடுத்துவருகின்றனர். இதையடுத்து அரசியலில் இறங்க முடிவெடுத்துள்ள தீபா ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ஆம் தேதி புதிய கட்சி குறித்த விபரங்களை வெளியிடுவார்.புதிதாக துவங்க உள்ள இந்த கட்சிக்கு  இந்திய அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.