திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Updated : திங்கள், 20 நவம்பர் 2017 (10:58 IST)

திமுகவில் மீண்டும் அழகிரி? - ஸ்டாலினுடன் மீண்டும் பனிப்போர்

திமுகவிற்குள் நுழையும் முயற்சியில் மு.க.அழகிரி ஈடுபட்டிருப்பதால் அவருக்கு, ஸ்டாலினுக்கும் இடையே மீண்டும் பனிப்போர் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


 

 
திமுகவிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட மு.க.அழகிரி தற்போது கருணாநிதியுடன் நெருக்கம் காட்டி வருகிறார். அவ்வப்போது வந்து அவரை சந்தித்துவிட்டு செல்கிறார். மு.க.முத்துவின் பேரன் திருமணத்திற்கு வந்த போது அழகிரியின் மொத்த குடும்பமும் கருணாநிதியுடன் செல்பி எடுத்துக்கொண்டது.
 
மேலும், சமீபத்தில் செய்தியாளருக்கு பேட்டியளித்த அழகிரி, தலைவர் கலைஞர் அழைத்தால் மீண்டும் அரசியலில் ஈடுபடுவேன் என அதிரடியாக அறிவித்துள்ளார். கருணாநிதி செயல்படாத இருக்கும் சூழ்நிலையில்,  திமுகவின் தலைமையாக ஸ்டாலின் செயல்பட்டு வருவது எல்லோருக்கும் தெரியும்.
 
இந்நிலையில், கருணாநிதியின் வங்கி கணக்கையும் ஸ்டாலினே நிர்வகிக்கட்டும் என சமீபத்தில் அவரது குடும்பத்தினரால் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதெல்லாம் முடியாது. அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என அழகிரி போர்க்கொடி தூக்கியுள்ளாராம். வாரிசு எதிர்ப்பு தெரிவித்தால் கருணாநிதியின் பவரை மற்றவர்களுக்கு கொடுப்பதில் சிக்கல் ஏற்படும்.  
 
மீண்டும் திமுகவிற்குள் நுழையும் முயற்சியில் அழகிரி ஈடுபட்டிருப்பதால், கருணாநிதி குடும்பத்த்திற்குள்  மீண்டும் பிரச்சனை தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.