வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 14 ஜூலை 2017 (01:08 IST)

ஓவியாவுக்கு போட்ட ஓட்டுக்களை எனக்கு போட்டிருக்கலாம்: அன்புமணி ஆதங்கம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அடுத்து யார் வெளியேறுகிறார் என்பதே தற்போதைய டென்ஷனாக உள்ளது. ஓவியா, ஜூலி, வையாபுரி, ஆர்த்தி ஆகிய நான்கு பேர் வெளியேறும் பட்டியலில் உள்ளனர்.



 
 
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்கள் இந்த நால்வரில் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு வாக்களித்து வருகின்றனர். நேற்று வரை நடிகை ஓவியாவுக்கு 1.5 கோடி வாக்குகள் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இந்த நிலையில் ஓவியாவுக்கு ஓட்டு போட்ட 1.5 கோடி மக்களும் எனக்கு ஓட்டு போட்டிருந்தால் இந்நேரம் தமிழகத்தை காப்பாற்றியிருப்பேன் என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாஸ் பெண்ணகரம் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 58000 வாக்குகள் மட்டுமே பெற்று திமுக வேட்பாளர் இன்பசேகரன் அவர்களிடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.