1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 11 நவம்பர் 2017 (13:31 IST)

நான் ஒன்றும் காந்தி பேரன் அல்ல; நீங்கள் அவரின் பேரன் பேத்திகளா? டிடிவி தினகரன் கேள்வி

சசிகலா குடும்பத்தினருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.


 

 
இந்நிலையில் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது:-
 
வருமான வரித்துறை சோதனை உள்நோக்கம் கொண்டது. ஆனால் என்ன உள்நோக்கம் என்பது தெரியவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ரெய்டு நடப்பதாக கூறி ஆதரவு தெரிவித்த திருமாவளவன், வைகோ, ஜி.கே.வாசன், வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு நன்றி.
 
வருமான வரித்துறை சோதனையை நாங்கள் வரவேற்கிறோம். புதுசேரி பண்ணை வீட்டில் பாதாள அறைகள், டிஜிட்டல் லாக்கர் என எதுவும் இல்லை. பெசன்ட் நகர் வீட்டில்தான் பேஸ்மெண்ட் உள்ளது என்றார்.
 
மேலும், நான் ஒன்றும் காந்தி பேரன் அல்ல. நான் சாதாரண மனிதன்தான். எங்களை குறை சொல்பவர்கள் காந்தியின் பேரன் பேத்திகளா என கேள்வி எழுப்பியுள்ளார்.