ஐடி ரெய்டு நடத்தியே தமிழகத்தில் தாமரை மலருமா??
மோடி தலைமையிலான பாஜக தமிழகத்தில் ஐடி ரெய்ட் நடத்தியே தனது ஆட்சியை இங்கு கொண்டு வர முயற்சி செய்வதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.
நேற்று காலை முதல் சசிகலா மற்றும் தினகரனின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் என பலரது வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
180-க்கும் மேற்பட்ட இடங்களில் 1800-க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஜெயா டிவி அலுவலகம், கொடநாடு எஸ்டேட் அலுவலகம், ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் மதுபான ஆலை ஆகியனையும் மிஞ்சவில்லை.
சமீபத்தில் நடந்த ரெய்டுகளிலேயே இது தான் மிகப்பெரியது என்று அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இது மோடியின் அரசியல் பழிவாங்க்தல் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
அரசியல் காரணங்களுக்காக வருமான வரித்துறையை பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது. இதுபோல் சோதனைகள் மூலம் தமிழகத்தில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என பாஜக திட்டம் தீட்டியுள்ளது என சர்ச்சைகள் எழுந்துள்ளது.