1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 1 ஜூன் 2017 (06:00 IST)

தேர்தல் ஆணையத்திற்கு லாரி லாரியாய் செல்லும் ஆவணங்கள்: அடங்காத இரட்டை இலை பரபரப்பு

அதிமுக கட்சியின் பெயரும், அக்கட்சியின் சின்னமான இரட்டை இலையும் முடங்கியிருப்பதால், சின்னத்தை கைப்பற்றா ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றன. இரு அணி தலைவர்களும் தேர்தல் ஆணைய அலுவலகத்த்ஹில் பிரமாண பத்திரங்களை மாறி மாறி தாக்கல் செய்து வந்தனர்.



 


இந்த நிலையில் ஈபிஎஸ் தரப்பு அணி நேற்று கூடுதலாக 70 ஆயிரம் பக்கங்கள் கொண்ட பிரமாண பத்திரங்களை  தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளது. இந்த ஆவணங்கள் 2 லாரிகளில் தேர்தல் ஆணைய  அலுவலகத்திற்Kஉ கொண்டு வரப்பட்டு தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல் நேற்று ஓபிஎஸ் அணியினர்களும் ஒரு மினி லாரியில் ஆவணங்களை திணித்துக் கொண்டு வந்து தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கொடுத்துச் சென்றனர். ஜூன், 16ம் தேதி வரை, ஆவணங்களைத் தாக்கல் செய்ய இரு அணிகளுக்கும் தேர்தல் ஆணையம் அவகாசம் கொடுத்துள்ளதால் இன்னும் எத்தனை முறை, இரு அணியினரும், தேர்தல் கமிஷனுக்கு, லாரி பிடித்து வரப்போகிறார்களோ என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஒருவித அச்சத்துடன் இருக்கின்றனர். இரு அணியினர்களும் கொடுத்த ஆவணங்கள் மலைபோல் குவிந்துவிட்டதாகவும், இவற்றை சரிபார்க்கவே மாதக்கணக்கில் ஆகும் என்றும் அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.