செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Updated : செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (06:12 IST)

தினகரன் அணியில் 20 எம்.எல்.ஏக்கள், 6 எம்பிக்கள்: ஆட்சி தப்புமா?

தினகரன் அணியில் 20 எம்.எல்.ஏக்கள், 6 எம்பிக்கள்: ஆட்சி தப்புமா?
அதிமுகவின் இரு அணிகளான ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி இணைவதில் என்ன பிரச்சனை என்று அதிமுக தொண்டர்களுக்கே தெரியவில்லை. இன்று இணைந்துவிடும், நாளை இணைந்துவிடும் என்று எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.



 
 
இரு அணி தலைவர்களும் மாறி மாறி பிரதமர் மோடியை பார்த்து பேசி வருகின்றனர்களே தவிர அதிகாரபூர்வ இணைப்பு குறித்து இதுவரை ஓபிஎஸ் அல்லது ஈபிஎஸ் பேசவில்லை என்பது தொண்டர்களின் மனக்குறையாக உள்ளது.
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் குடைச்சல் கொடுக்கும் வகையில் தினகரன் நேற்று மதுரையில் பிரமாண்டமான கூட்டத்தை நடத்தி காட்டியுள்ளார். இந்த கூட்டத்தில் 20 எம்.எல்.ஏக்களும், 6 எம்பிக்களும் கலந்து கொண்டுள்ளனர். எனவே இரு அணிகளும் இணைந்தாலும் ஆட்சியை தக்க வைத்து கொள்ளுமா? என்பது சந்தேகமே. ஆட்சியின் பாதுகாப்புக்கு தற்போது மத்திய அரசு மட்டுமே பக்கபலமாக இருந்தாலும் இரு அணிகள் இணைப்பில் தாமதம் ஏற்பட்டால் தினகரனின் கரங்கள் வலுவாகும் என்றே அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறியுள்ளனர்.