1. செய்திகள்
  2. செய்திகள்
  3. 2015- கண்ணோட்டம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 24 டிசம்பர் 2015 (19:10 IST)

மார்டின் கப்தில், ஜோ ரூட் அதிக கேட்சுகள் பட்டியலில் முதலிடம்

மார்டின் கப்தில், ஜோ ரூட் அதிக கேட்சுகள் பட்டியலில் முதலிடம்
அதிக கேட்சுகள் பிடித்தவர்கள் [ஒருநாள் போட்டி] :
 
2015ஆம் ஆண்டில் அதிக கேட்சுகள் பிடித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் 21 கேட்சுகள் [29 போட்டிகள்] பிடித்து முதலிடத்தில் உள்ளார்.
 

 
ஜிம்பாப்வே வீரர் கிரைக் எர்வின் 17 கேட்சுகளுடன் [20 போட்டிகள்] 2ஆவது இடத்திலும், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 15 கேட்சுகளுடன் [20 போட்டிகள்] 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
 
பங்களாதேஷ் வீரர் நசிர் ஹொசைன், ஆஸ்திரேலியாவின் கிளைன் மேக்ஸ்வெல், தென் ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் தலா 14 கேட்சுகள் பிடித்து 4ஆவது இடத்தில் உள்ளனர்.
 
அதிக கேட்சுகள் பிடித்தவர்கள் [டெஸ்ட் போட்டி] :
 
2015ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்சுகள் பிடித்தவர்கள் பட்டியலில், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 22 கேட்சுகள் [13 போட்டிகள், 25 இன்னிங்ஸ்] பிடித்து முதலிடத்தில் உள்ளார்.
 
மார்டின் கப்தில், ஜோ ரூட் அதிக கேட்சுகள் பட்டியலில் முதலிடம்

 
இந்தியாவின் அஜிங்கே ரஹானே 20 கேட்சுகள் [9 போட்டிகள், 17 இன்னிங்ஸ்] பிடித்து இரண்டாம் இடத்திலும், இங்கிலாந்தின் அலைஸ்டர் குக் 13 போட்டிகள், 25 இன்னிங்ஸ்] பிடித்து 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
 
வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜெர்மைன், இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன், இலங்கையின் ஆஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் தலா 14 கேட்சுகள் பிடித்து 4ஆவது இடத்திலும் உள்ளனர்.
 
பாகிஸ்தானின் அஷார் அலி மற்றும் ஆஸி.யின் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் தலா 13 கேட்சுகள் பிடித்து 5ஆவது இடத்தில் உள்ளனர்.