Political highlights in 2010 | 2010இல் இந்திய அரசியல்!
2010 ஆண்டு முடிய இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், இந்தியாவில் இந்த ஆண்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை பின்னோக்கி திரும்பி பார்த்தால், இந்திய அரசியல்வாதிகள் அடிக்கும் வழக்கமான அரசியல் கூத்துக்களோடு, அவர்களுடன் சேர்ந்து அதிகார வர்க்கத்தினர் கூட்டு சேர்ந்து அடித்த ஊழல்தான் மிகப்பிரமாண்டமாக கண்முன் நிழலாடுகிறது.
காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த ஊழல், மகாராஷ்ட்ராவில் கார்கில் வீரர்களுக்காக கட்டப்பட்ட ஆதர்ஷ் வீட்டு வசதி குடியிருப்பு திட்டத்தில் நடந்த ஊழல் மற்றும் இவையெல்லாவற்ரையும் தூக்கிச் சாப்பிட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் ஆகியவைதான் 2010 ஆம் ஆண்டை ஊழல் ஆண்டாக குறிப்பிடும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றன.
அதற்கு அடுத்தபடியாக குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகள். அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மற்றும் உணவுக் கிடங்குகளில் வீணாகும் உணவு பொருட்களை ஏழைகளுக்கு இலவசமாக கொடுத்தாலென்ன என்று கேட்டு மத்திய அரசை உச்ச நீதிமன்றம் காய்ச்சி எடுத்தது போன்றவற்றை குறிப்பிடலாம்.
இதுதவிர காமன்வெல்த் ஊழல் மற்றும் ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மத்திய அரசுக்கும், சிபிஐ-க்கும் கிடுக்குப்பிடி போட்டு உச்ச நீதிமன்றம் கொடுத்த குடைச்சல் கேள்விகள்தான் சிபிஐ அதிகாரிகளை மேற்கூறிய ஊழலில் தொடர்புடைய சுரேஷ் கல்மாடி, ஆ. ராசா, நீரா ராடியா உள்ளிட்ட பலரது வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனை நடத்த விரட்டியது எனலாம்.
மத்தியில் நடந்த நிகழ்வுகளில் இவை குறிப்பிடத்தகுந்தவை என்றால், மாநிலங்கள் வாரியாக நடந்த அரசியல் கூத்துக்களை பார்க்கலாம்.
தென்னிந்தியா:
தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்களில் தமிழகத்தில் அரசியல் ரீதியாக பெரும் மாற்றம் ஏதும் ஏற்பட்டுவிடவில்லை.ஸ்பெக்ட்ரம் ஊழலை மையமாக வைத்து திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சலசலப்பு எழுந்துள்ள நிலையில், மாற்றம் ஏதும் இருந்தால் அது அடுத்த ஆண்டுவாக்கில்தான் இருக்கும்.
புதுச்சேரியிலும் இதே கதைதான்! பெரிய அளவிலான அரசியல் மாற்றங்கள் அல்லது நிகழ்வுகள் எதையும் அம்மாநிலம் சந்திக்கவில்லை.
அதேப்போன்று இன்னொரு மாநிலமான கேரளாவில் பெரிய அரசியல் மாற்றங்களோ அல்லது நிகழ்வுகளோ இல்லை. இங்கும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அடுத்த தொடக்கத்தில் ஏதும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
ஆனால் மற்ற இரு தென்மாநிலங்களான ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் அரசியல் பரபரப்புகளுக்கும், நிகழ்வுகளுக்கும் பஞ்சமே இல்லை.
ஆந்திராவில் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வென்றால் அது விஸ்வரூபம் எடுத்திருக்கும் தெலங்கானா தனி மாநில கோரிக்கைதான்!
தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் ஊதி விட்ட இந்த நெருப்பு, உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்களிடம் தீயாக பற்றிக்கொண்டது. இது தொடர்பாக அனைத்து தரப்பினரது கருத்தை அறிய ஒரு கமிட்டியை அமைப்பதாக மத்திய அரசு அறிவித்த பின்னர், அந்த நெருப்பு இலேசாக தணிந்ததுபோன்று காட்சியளித்தது.ஆனால் ஆண்டு முடியும் தருவாயில் அந்த பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்து, தெலங்கானா பிராந்தியத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு சென்றுள்ளது.
இது ஒருபுறமிருக்க, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி, காங்கிரஸிலிருந்து விலகி புதுக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியில் கணிசமான எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.க்கள் மற்றும் ஆதரவாளர்களும் உள்ளதால், காங்கிரசுக்கு ஒரு வகையில் இழப்புதான்.
ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் தெலங்கானா பிரச்சனைகளை சமாளிக்க முதல்வராக இருந்த ரோசய்யாவை மாற்றிவிட்டு, அவருக்குப் பதிலாக கிரண் குமார் ரெட்டியை முதல்வராக்கியது காங்கிரஸ் மேலிடம்.
ஆனால் அவரும் மேற்கூறிய பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் திணறுவதால், ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.
கர்நாடகாவை பொறுத்தவரை சுரங்க ஊழல், நில பேர ஊழல் என்று முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு பல்வேறு சோதனைகள சந்தித்து வருகிறது.இடையில் எதிர்கட்சிகள் சட்டசபையில் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எடியூரப்பா அரசு தப்பி பிழைத்தாலும், அவரது ஆட்சிக்கான ஆபத்து தலைக்கு மேல் தொங்குகிற கத்தியாக ஆடிக்கொண்டுதான் இருக்கிறது.
மகாராஷ்ட்ரா
மகாராஷ்ட்ராவை பொறுத்தமட்டில், கார்கில் வீரர்களுக்காக கட்டப்பட்ட ஆதர்ஷ் வீட்டு வசதி குடியிருப்பில் நிகழ்ந்த ஊழல் தொடர்பாக வெளியான செய்திகளும், அதனைத் தொடர்ந்து முதல்வரையே மாற்றும் அளவிற்கு நிகழ்ந்த அரசியல் மாற்றம்தான் இந்த ஆண்டின் பரபரப்பு நிகழ்வுகள் என்று குறிப்பிடலாம்.
குஜராத்
குஜராத்தில் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா மீண்டும் மகத்தான வெற்றி பெற்றது அக்கட்சிக்கு கிடைத்த பெருமையைவிட, முதல்வர் நரேந்திர மோடிக்கு கிடைத்த பெருமை என்றே கூறலாம்.
அதே சோதனையையும் மோடி சந்திக்கவேண்டியது இருந்தது.குஜராத் கலவர வழக்கில் உச்ச நீதிமன்றம் நியமித்த விசாரணைக் குழு முன்னர் ஆஜரானது மற்றும் அவருக்கு நெருக்கமான உள்துறை அமைச்சர் சொராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டு, சிறை, விசாரணை என அலைகழிக்கப்பட்டபோது பா.ஜனதா மற்றும் நரேந்திர மோடி ஆகிய இருதரப்புக்குமே இமேஜ் சரிவு ஏற்பட்டது.
ஆனாலும் பின்னர் குஜராத் வழக்கில் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிறப்பு விசாரணை ஆணையத்தின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது, இது தொடர்பான சிக்கலிலிருந்து அவர் மீள வழி வகுத்தது என்றே கூறலாம்.
உத்தரபிரதேசம்
உத்தரபிரதேசத்தில் பரபரப்பு அரசியலுக்கு பெயர்போன முதலமைச்சரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி சொத்து குவிப்பு வழக்கு மற்றும் ரூபாய் நோட்டு மாலை சர்ச்சையில் சிக்கியது உள்ளிட்ட பல நிகழ்வுகள் அவருக்கு சோதனையாக அமைந்தன.
அதே சமயம் மிகுந்த எதிர்பார்ப்புக்குள்ளான அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கின் தீர்ப்பை அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய பின்னர் கலவரம், மதமோதல் போன்ற எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடந்தேறாதது மாயாவதிக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே நிம்மதி பெருமூச்சை அளித்தது என்றே கூறலாம்.
பீகார்
பீகாரை பொறுத்தவரை முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கும், அவரது ஐக்கிய ஜனதா தளக்கட்சிக்கும் ஏற்றம் மிகுந்த ஆண்டு என்றே கூறலாம்.சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்த நிதிஷை, கூட்டணிக் கட்சியான பா.ஜனதாவே தலையில் தூக்கிவைத்துக்கொண்டாடுகிறது.
ராகுல் காந்தியின் பிரச்சாரத்தையெல்லாம் தவிடுபொடியாக்கி,காங்கிரஸ் கட்சிக்கு நான்கே நான்கு இடங்கள் மட்டும் கிடைக்கச் செய்து மண்ணை கவ்வ வைத்ததற்காகவும், குடும்ப ஆட்சி நடத்தி பீகாரை குட்டிச்சுவராக்கிய லாலு பிரசாத் யாதவை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு தலையெடுக்க விடாமல் தோல்வியடையச் செயததும் பா.ஜனதாவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியோ பீகார் தேர்தலில் கிடைத்த மரண அடியால் தமிழகம் உள்பட மற்ற மாநில தேர்தல்களுக்காக போட்டு வைத்த கணக்குகளையெல்லாம் மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.
ராஜஸ்தான்
ராஜஸ்தானை பொறுத்தவரை இந்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கிய குஜ்ஜார் இனமக்களின் இட ஒதுக்கீடு போராட்டம், ஆண்டு இறுதியில் மீண்டும் வெடித்ததுதான் முக்கிய விடயமாக உள்ளது.
காஷ்மீர்
காஷ்மீர் வழக்கம்போல் இந்த ஆண்டும் அம்மாநில மற்றும் மத்திய அரசுக்கு தலைவலியாகத்தான் அமைந்தது.மத்திய படைகளை வாபஸ் பெறக்கோரி நடந்த போராட்டத்தில் மாணவன் ஒருவன் உயிரிழக்க, அதுவே அடுத்தடுத்து பெரிய அளவிலான போராட்டத்திற்கு வழி வகுத்து, போராட்டத்தில் பெண்களையும் களமிறங்க வைத்தது.
போராட்டக்காரர்கள் மத்திய படையினரை கல்வீசி தாக்குவதும், பதிலுக்கு படையினர் நடத்தும் துப்பாக்கிச் சூட்டில் யாராவது உயிரிழப்பதும், அதனைத் தொடர்ந்து ஊரடங்கு அமலாவதும், இந்த மோதலை பிரிவினவாத குழுவினர் தூண்டிவிட்டு அதில் குளிர் காய்வதுமாக நீடித்த போராட்டம், ஒருவழியாக மத்திய அரசு அமைத்த பேச்சுவார்த்தைக் குழுவுக்கு பின்னர் அடங்கியது.