திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022
  3. வாக்குச்சாவடி
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 5 பிப்ரவரி 2022 (08:45 IST)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தகவல் மற்றும் புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் அறிவிப்பு. 

 
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது என்பதும் நேற்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  
 
மேலும் வேட்புமனுக்கள் அனைத்தும் இன்று பரிசீலனை செய்யப்பட்டு முறைப்படி இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும். 7 ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை திரும்பப் பெற அவகாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினம் களத்தில் இருக்கும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். 
 
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தகவல் மற்றும் புகார்களை தெரிவிக்க 88075 66518 என்ற எண்ணை அழைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
மேலும், பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான தகவல் மற்றும் புகார்களை தேர்தல் பார்வையாளரிடம் நேரில் தெரிவிக்க, விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அறை எண் 9-ல் மாலை 5 மணி முதல் 6 மணி வரை தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.