1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 20 நவம்பர் 2017 (16:18 IST)

எடுத்தவுடன் முதலமைச்சராக இது என்ன அதிமுகவா?? ஸ்டாலின் காட்டம்!!

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவின் ஆட்சியையும், மத்திய பாஜக அரசின் போக்கையும் கண்டித்து பேசியுள்ளார்.


 
 
ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு பன்னீர் செல்வம் முதல்மைச்சர் பதவியை ஏற்றார். அதன் பின்னர் ஏற்பட்ட சண்டையால் கட்சி இரண்டாக பிளந்து எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்து வருகிறார்.
 
இந்நிலையில் மு.க.ஸ்டாலின், அதிமுகவை போல் எடுத்த உடன் முதலமைச்சராக முடியாது. திமுகவில் படிப்படியாகத்தான் வளர முடியும் என்று தெரிவித்துள்ளார். 
 
மேலும் அவா் கூறுகையில், தமிழகத்தில் தற்போது நடைபெற்றுவரும் ஆட்சியை இதுவரை ஏன் கலைக்கவில்லை.  தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற வருமான வரி சோதனையின் விளைவுகள் என்ன என்று வருமான வரித்துறையினா் விளக்க வேண்டும். 
 
வருமான வரித்துறை மூலம் மத்திய அரசு மாநில அரசை மிரட்டி வருகிறது. தமிழ் மண்ணில் பாஜகவினா் எளிதாக நுழைய முடியாது.  தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.