ஞாயிறு, 14 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (06:14 IST)

நள்ளிரவில் அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் எதிரொலி: அவசர அவசரமாக சென்னை திரும்பும் ஓபிஎஸ்

நள்ளிரவில் அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் எதிரொலி: அவசர அவசரமாக சென்னை திரும்பும் ஓபிஎஸ்
நேற்று நள்ளிரவில் அமைச்சர்கள் வீடுகளில் ரகசிய ஆலோசனை கூட்டம் நடைபெற்று முடிந்ததை அடுத்து இன்று ஒன்றுபட்ட அதிமுக உருவாக அதிக வாய்ப்பு உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.



 


ஓபிஎஸ் அவர்களுக்கு முதல்வர் மற்றும் பொருளாளர் பதவியும் எடப்பாடியாருக்கு பொதுச்செயலாளர் பதவியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தேனியில் இருந்த ஓபிஎஸ் நேற்று இரவு அங்கிருந்து கிளம்பி சென்னை வந்து கொண்டிருப்பதாகவும், அவர் சென்னைக்கு வந்தவுடன் அதிமுகவின் இரு பிரிவினர்களும் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒற்றுமைக்கு வழிவகை செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது. மூத்த அமைச்சர்கள் தினகரனுக்கு எதிராக போர் கொடி தூக்கியதால் இன்று முக்கிய முடிவுகள் நிச்சயம் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.