Daily Horoscope
✕

தைராய்டு பிரச்சனைகளை சீராக்க உதவும் ஆசனங்கள்!!

Updated: புதன், 24 ஜூலை 2019 (14:16 IST)
 
தைராய்டு ஏற்பட முக்கியக் காரணம் உணவு முறையே. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் பொருள்கள்தான் தைராய்டு சுரப்பியை சிதறடிக்கச் செய்துவிடுகிறது. இதனால் சத்துக் குறைபாடு உண்டாகிறது. 
 
குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப்போவது, கருச்சிதைவு, கருமுட்டையில் கட்டி போன்றவை உண்டாகின்றன. இதனால்தான்  பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
 
தைராய்டு குறைபாடுகளைப் போக்குவதில் மத்ஸ்யாசனம், உத்தானபாதாசனம், சர்வாங்காசனம் போன்ற ஆசனங்கள் உதவும். அத்துடன் பிட்யூட்டரி சுரப்பியின் செயல்பாடுகளை அதிகரிக்கவும் இந்த ஆசனங்கள் உதவும். 
 
விபரீதகரணி என்ற ஆசனம் செய்வதால் கழுத்துப் பகுதியில் ரத்த ஓட்டம் சரியாகும். இதனால் தைராய்டு சுரப்பிகள் நன்றாக வேலை செய்யும். ஹாலாசனம் செய்வதால் தலைக்குப் பின் பகுதியிலுள்ள பிட்யூட்டரி சுரப்பி நன்றாக வேலை செய்யும். அத்துடன் தைராய்டு, பாரா தைராய்டு ஆகிய சுரப்பிகள் நன்றாக சுரக்கத் தொடங்கும். ஆக, உடல்நலத்துக்குத் தேவையான ஹார்மோன்கள் அனைத்தும் சீராகச் சுரக்கும்.

எல்லாம் காட்டு

இரவு நேரத்தில் (Night Shift) பணி புரிவதில் உடலில் ஏற்படும் பாதிப்பு!.. மக்களே அலார்ட்..

வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஏற்படும் பலன்கள்!.. வாங்க பார்ப்போம்!...

சூடா காபி, டீ குடிச்சா கேன்சர் வருமா?!.. பீதிய கிளப்புறாங்களே!...

சாப்பிட்டவுடன் தூங்குவதால் இவ்வளவு பிரச்சனை இருக்கா!.. வாங்க பார்ப்போம்!...

மனித உடலில் வியப்பூட்டும் அறிகுறிகள்!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments