திங்கள், 8 டிசம்பர் 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

குபேரனுக்கு உகந்த சங்கு முத்திரை செய்வதால் என்ன பலன்கள்.....?

குபேரனுக்கு உகந்த சங்கு முத்திரை செய்வதால் என்ன பலன்கள்.....?
குபேரன் வடக்குத் திசைக்கு அதிபதி என்பதால்தான் வாழப் பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழியே உருவாயிற்று. குபேரனுக்கு உரிய நாள்  வியாழக்கிழமை. அதுவும் பூச நட்சத்திரத்துடன் கூடிய வியாழக்கிழமை ரொம்பவே விசேஷம். அந்த நாளில் குபேரனை வழிபட்டால், அளவற்ற செல்வங்களுக்கு அதிபதியாகும்  பாக்கியம் கிடைக்கும்.
சங்கு முத்திரையை தொடர்நது செய்து வந்தால் தைராய்டு நோய் குணமடையும். 
 
செய்முறை: இடது கை பெருவிரலை படத்தில் காட்டியுள்ளபடி வலது கை விரல்களால் மூடிக்கொள்ளவும். இடது கையின் மற்ற விரல்கள்  வலது கை விரல்களின் பின்பகுதியில் சாய்த்து வைத்துக்கொள்ளவும். வலது கை பெருவிரல் நுனியால் இடது கை நடு விரல் நுனியை தொட்டுக்கொள்ளவும், மற்ற இடது கை விரல்கள் நடுவிரலை சார்ந்து இருக்கவேண்டும். இந்த முத்திரை சங்கு வடிவம் போல் இருக்கும்.  இதனால் இதை சங்கு முத்திரை என அழைக்கப்படுகிறது.
 
பலன்கள்: தைராய்டு நோய் குணமடைகிறது. திக்கிப் பேசுவது குணமடைகிறது. குரல் வளம் நன்றாகி பேச்சு நன்றாக வருகிறது. இந்த  முத்திரை நமது தொப்புளுக்கு கீழே உள்ள 72000 நரம்புகளை சக்தியுடன் இயங்கவைக்கிறது. நல்ல பசி கொடுக்கிறது. ஜீரண சக்தி  அதிகமாகிறது.
குபேரனுக்கு உகந்த சங்கு முத்திரை செய்வதால் என்ன பலன்கள்.....?
உடலில் உள்ள எரிச்சல் நீங்குகிறது. காய்ச்சல் குணமடைகிறது. அலர்ஜி மற்றும் தோல் நோய் குணமடைகிறது. தசை வலுவடைகிறது. தொண்டையில் ஏற்படும் நோய்கள் குணமடைகிறது.

மன அமைதி கிடைக்கிறது. மன ஒருமைப்பாடும் ஞாபகசக்தியும் அதிகரிக்கிறது.  தியானத்தின்போது இந்த முத்திரை பயிற்சி அதிக பலன் கொடுக்கும். இம்முத்திரையை 20 நிமிடங்கள் வரை இருமுறை செய்யலாம்.