செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 12 மே 2023 (22:03 IST)

பீரால் இயங்கும் மோட்டார் சைக்கிளை உருவாக்கி இளைஞர் சாதனை

ameirca
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த  ஒரு இளைஞர்  பீரால் இயங்கும் ஒரு மோட்டார் சைக்கிளை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி  நடைபெற்று வருகிறது.

இங்குள்ள மினசோட்டா என்ற மாகாணத்தில் வசிப்பவர் கே மைல்மல்சன். இவர் மோட்டார் சைக்கிள்கள் தயாரிப்பதில் ஆர்வம் கொண்டிருக்கும் நிலையில், புதிதாக எதாவது சாதிக்க வேண்டும் என்ற முனைப்பில்  இருந்த அவர் தற்போது பீரால் இயங்கும் பைக்கை உருவாக்கியுள்ளார்.

இந்த மோட்டார் சைக்கிள் 240 கிமீ வேகத்தில் செல்லும் எனவும், இதற்கு எரிபொருளாகப் பெட்ரோலை ஊற்றுவதற்குப் பதலாக பீர் ஊற்றினால்  வாகனம் செல்லும், என்று தெரிவித்துள்ளார்.

இது, கூடுதலாக வெப்பமூட்டும் சுருளுடன் (coil) 14 கேலன் கெக் கொண்டு இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இவரது திறமைக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.