1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 7 மே 2023 (16:41 IST)

40 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் மாயம்! – ட்ரெண்டாகும் The Gujarat Story!

abuse
குஜராத் மாநிலத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் இருந்து பெண்கள் மதம் மாற்றப்பட்டு கடத்தப்படும் சம்பவம் குறித்து சமீபத்தில் வெளியான தி கேரளா ஃபைல்ஸ் படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த தகவலின்படி, குஜராத் மாநிலத்தில் கடந்த 2016ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையிலான 5 ஆண்டிற்குள் மட்டும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2016ல் 7,105 பெண்களும், 2017ல் 7,712 பெண்களும், 2018ல் 9,246 பெண்களும், 2019ல் அதிகபட்சமாக 9,268 பெண்களும், 2020ல் 8,290 பெண்களும் மாயமானதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

மாயமான பெண்களின் நிலைமை என்ன என கேள்வி எழுப்பி சமூக வலைதளங்களில் The Gujarat Story என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

Edit by Prasanth.K