ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj

500 அடி உயர தூணில் ஏறி செல்ஃபி எடுத்த இளைஞருக்கு .காத்திருந்த அதிர்ச்சி

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு நபர்  500 அடி உயர தூணில் ஏறி செஃபி எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் எந்திரமயமாகி இணையதளத்திற்கு அடிமையானதில் இருந்து இளைஞர்களின் ஆர்வம் செல்ஃபியை நோக்கியும் புது புது வித்தியாசமான வீடியோவைப் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவர் போர்த் நதியில் கட்டப்பட்டுள்ள தொங்கு பாலத்தில் உள்ள உயர்ந்த தூணில் ஏறி செஃபி எடுத்துள்ளார். இந்த தூணின் உயரம் 500 அடியாகும்.

இந்த ஆபத்தான நிலையில் செல்ஃபி எடுத்த ஆடம் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்லார்.