1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 ஜூலை 2020 (14:19 IST)

விலை குறைந்தது விவோ ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

விவோ நிறுவனம் தனது விவோ ஸ்மார்ட்போன் மீதான விலையை குறைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 
விவோ நிறுவனம் இந்த ஆண்டு மே மாதம் அதன் விவோ வி19 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இப்போது, இதன் விலை ரூ.4,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. 
 
அந்த வகையில் விவோ வி19 ஸ்மார்ட்போனின் 128 ஜிபி வேரியண்ட்  ரூ.24,990 ஆகவும், 256 ஜிபி வேரியண்டின் விலை ரூ.27,990 ஆகவும் உள்ளது.
 
விவோ வி19 சிறப்பம்சங்கள்: 
# 6.44 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 20:9 E3 சூப்பர் AMOLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர்
# அட்ரினோ 616 GPU, ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 10
# 8 ஜிபி LPDDR4x ரேம், 128 ஜிபி / 256 ஜிபி UFS 2.1 மெமரி
# டூயல் சிம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79
# 8 எம்பி வைடு ஆங்கில் கேமரா, f/2.2
# 2 எம்பி டெப்த் கேமரா, f/2.4
# 2 எம்பி மேக்ரோ கேமரா, f/2.4
# 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
# 8 எம்பி 105° வைடு ஆங்கில், f/2.2
# 4500 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் விவோ ஃபிளாஷ் சார்ஜ் 2.0 ஃபாஸ்ட் சார்ஜிங்