செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 27 மார்ச் 2021 (16:59 IST)

வீடியோ கேம் விளையாடி பல லட்சம் சம்பாதிக்கும் இளைஞர் !

கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் உலகில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியத். இதனால் உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தின.

தற்போது சில தளர்வுகளுடன் அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளபோதிலும்  கொரொனா வைரஸின் இரண்டாவது அலை பரவிவருகிறது.

இந்நிலையில், வீடியோ கேம் விளையாடி மாதம் பல லட்சம் சம்பாதித்து வருகிறார் இளைஞர் ஒருவர்.

தென்கொரியாவில் வசித்து வருபவர் கிம் மின் க்யோ(24). இவர் கொரோனா காலத்தில் வீடியோ கேம் விளையாடத் தொடங்கினார். தினமும் 15 மணிநேரம் விளையாடிவரும் அவர் இதன் மூலம் மாதம் 35 லட்சம் ரூபாய் சம்பாதித்து வருகிறார். இது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.