புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (07:28 IST)

7 லட்சத்தை நெருங்கியது உலக கொரோனா பலி: அதிர்ச்சி தகவல்

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.84 கோடியை தாண்டிய நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6.96 லட்சமாக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதுவரை உலக அளவில் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 1.1 கோடியாகும். மேலும் மருத்துவமனைகளில் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 64,732 ஆகும்
 
அமெரிக்காவில் 48 லட்சம் பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது நேற்று மட்டும் அமெரிக்காவில் புதிதாக 48,010 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1.58 லட்சமாக உயர்ந்துள்ளது.
 
மேலும் பிரேசிலில் 27 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் பிரேசிலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 94,702 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 18 லட்சம் பேருக்கு கொரோனா பாதித்துள்ளது என்பதும், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 50,629 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது