புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 14 ஏப்ரல் 2020 (07:15 IST)

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு: 20 லட்சத்தை நெருங்குவதால் பரபரப்பு

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்குவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சற்றுமுன் கிடைத்த தகவலின்படி உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19, 24,314ஆக உள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டும் 5,86,057 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல் கொரோனாவால் உலக நாடுகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,19,655 என்றும் இதில் அமெரிக்காவில் மட்டும் 23,604 பேர்கள் என்றும் குறிப்பாக நியூயார்க்கில் மட்டுமே கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இத்தாலியில் 20,465 பேர்கள், ஸ்பெயினில் 17,756 பேர்கள், பிரான்ஸில் 14,967 பேர்கள்,  இங்கிலாந்தில் 11,329 பேர்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்குள்ளாக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 4,44,836 என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
இந்தியாவில் 9,352 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் குறிப்பாக தலைநகர் டெல்லியில் கொரோனாவின் தாக்கம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. டெல்லியில் மட்டும் 1,154 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும், அங்கு 24 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது