புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (06:59 IST)

3.03 கோடி பேர் பாதிப்பு, 2.20 கோடி பேர் குணமடைந்தனர், 9.5 லட்சம் பேர் மரணம்: உலக கொரோனா நிலவரம்

உலகம் முழுவதும் 3.03 கோடி பேர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அதில் பெரும்பாலானோர் குணமடைந்து  வருகின்றனர். இருப்பினும் கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 9.50 லட்சமாக உள்ளது.
 
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30,334,331 என்றும், உலக நாடுகளில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 950,157 என்றும், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 22,023,837 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,874,549 என்றும், பலியானோர் எண்ணிக்கை 202,213 என்றும், குணமானோர் எண்ணிக்கை 4,154,999 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,212,686 என்றும், குணமடைந்தோர் எண்ணிக்கை 4,109,828 என்றும், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 84,404 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,457,443 என்றும், பலியானோர் எண்ணிக்கை 135,031 என்றும், குணமானோர் எண்ணிக்கை 3,753,082 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ரஷ்யா, பெரு, கொலம்பியா, மெக்சிகோ, தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், அர்ஜெண்டினா ஆகிய நாடுகள் கொரோனா பாதிப்பில் முதல் பத்து இடங்களில் உள்ளன.