உலக கொரோனா பாதிப்பு 2.56 கோடி, பலி 8.54 லட்சம்: பரபரப்பு தகவல்
உலகில் கொரோனா தொற்றால் இதுவரை 25,622,607பேர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும், உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 854,250பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உலகில் கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் 17,925,217பேர் மீண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,211,691 என்பதும், கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 187,736 என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,910,901 என்பதும், கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 121,515 என்பதும் குறிப்பிடத்தக்கது
உலகிலேயே கொரோனாவால் அதிக பாதிப்பை சந்தித்த 3வது நாடான இந்தியாவில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3,687,939 ஆக உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனா தொற்றால் 65,435பேர் மரணம் அடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
அமெரிக்கா, பிரேசில், இந்தியாவை அடுத்து பெரு, தென்னாப்பிரிக்கா, கொலம்பியா, மெக்சிகோ, ஸ்பெயின் மற்றும் சிலி நாடுகள் கொரோனா பாதிப்படைந்த முதல் பத்து நாடுகள் பட்டியலில் உள்ளன.