செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (14:06 IST)

பெண்கள் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் ..நியூசிலாந்தில் அதிரடி !

நியூசிலாந்து நாட்டில் கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் மசோதா நேற்று, அந்த நாட்டு நாடாளுமம்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் அந்நாட்டு பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த சட்டத்தை வரவேற்றுள்ளனர்.
நியூசிலாந்து நாட்டில் பெண்கள் கருக்கலைப்பு செய்வது, தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டு வந்தது. இருப்பினும் பெண்ணுக்கு கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு உடல் மற்றும் மன  ரீதியிலான ஆபத்து நேரும் பட்சத்தில் கருக்கலைப்பு நடவடிக்கையை அவர் மேற்கொள்ளலாம். 
 
இதற்கு இரு மருத்துவர்கள் அப்பெண்ணை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்துத்தான் இதற்கு அனுமதி வழங்குவர். அதன் பிறகு தான் கருக்கலைப்பு செய்ய முடியும்.இந்நிலையில் கடந்த 40 வருடமாக அமலில் இருக்கும் இச்சட்டத்தை நீக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் குரல் எழுப்பி போராடி வந்தனர். இதனைத்தொடர்ந்து கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கும் மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. 
 
இந்தப் புதிய சட்டத்தின் மூலம், பெண்கள் கர்ப்பம் தரித்த 20 வாரங்களுக்குள் மருத்துவரின் உதவியுடன் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்றும் இதற்க்காக அவர்கள் எந்த சட்ட வழிமுறைகளையும் பின்பற்ற தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து  அந்த அந்த நாட்டின் நீதித்துறை மந்திரி ஆண்ரூ கூறியுள்ளதாவது : இந்தக் கருக்கலைப்பு என்பது பெண்ணின் உடல் மற்றும் மனம் சார்த்த பிரச்சனைகளை கருத்தில் கொண்டு அவசியமாகிறது. இதற்கு பாதுகாப்பான கருக்கலைப்பு முக்கியம். மேலும் பெண் தனது உடலில் என்ன நடக்க வேண்டும் என்பதை பற்றி தீர்மானிகும் உரிமை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இந்த கருக்கலைப்பு  சட்டத்துக்க்கு அந்நாட்டு பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த சட்டத்தை வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.