யூடியூப் வீடியோ பார்த்து தனக்குத்தானே குழந்தை பெற்ற இளம்பெண்
இணையத்தில் யூடியூப் என்பது அனைவருக்குமான ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இதில் உள்ள கோடிக்கணக்கான வீடியோக்களில் இல்லாத விஷ்யமே இல்லை என்று கூறலாம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை யூடியூபை பார்த்துதான் பல விஷயங்களை தெரிந்து கொள்கின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த டியாஃபிரீமேன் என்ற 22 வயது இளம்பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இருப்பினும் வேலை விஷயமாக அவர் ஜெர்மனி செல்ல நேர்ந்தது. ஜெர்மனியில் விமான நிலையத்தில் இறங்கியதுமே அவருக்கு பிரசவ வலிவந்துவிட்டது.
இருப்பினும் வலியை தாங்கிக்கொண்டே அவர் உடனே தங்கும்விடுதிக்கு சென்றார். உடனே தனது லேப்டாப்பை ஓப்பன் செய்து யூடியூப் வீடியோவில் குழந்தையை பிரசவிப்பது எப்படி என்பதை வீடியோவில் பார்த்து குளியல் தொட்டியில் இருந்து கொண்டு தனக்கு தானே பிரசவம் பார்த்து கொண்டார். பின்னர் தொப்புள்கொடியை வெட்டுவது முதல் குழந்தையை முதன்முதலில் குளிப்பாட்டுவது வரை அனைத்தையும் யூடியூபில் பார்த்து அவர் சரியாக செய்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவு செய்துள்ள டுவீட்டுக்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது