செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 24 டிசம்பர் 2017 (12:37 IST)

டயர் ரூபத்தில் வந்த எமன்: இளம்பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்...

தாய்லாந்தில் சாலை சென்றுக்கொண்டிருந்த பெண்ணின் மோட்டார் சைக்கிள் மீது டிரக் டயர் ஒன்று மோதியதால் அந்த இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
தாய்லாந்தின் Nakhon Pathom மாகாணத்தின் நெடுஞ்சாலையில் 28 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் மறுபுறத்தில் சென்றுக்கொண்டிருந்த டிரக்கின் டயர் ஒன்று உருண்டோடி அந்த பெண் மீது மோதியது. 
 
அந்தபெண்ணின் தலையில் டயர் மோதியதால், சம்பவ இடத்திலேயே அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பெண்ணின் தலையில் டயர் வேகமாக மோதியதாலும்,  கழுத்து பகுதி முழுமையாக உடைந்ததாலும் அவர் சம்பவ இடத்தியேலே உயிரிழ்ந்தார் என மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.