கொரோனாவை விட மோசமானதை உலகம் சந்திக்கும் – பகீர் கிளப்பும் உலக சுகாதார அமைப்பு!
உலகம் முழுவதும் புதிய வீரியமிக்க கொரோனா பரவி வரும் நிலையில் கொரோனாவை விட மோசமான நிலையை உலகம் சந்திக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டில் கொரோனா பாதிப்பு பல கோடிகளை தாண்டியுள்ள நிலையில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு விநியோகம் சில நாடுகளில் மட்டும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பிரிட்டன் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் புதிய கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமான கொரோனா வைரஸை விட 70% வேகமாக பரவும் இந்த கொரோனா வைரஸால் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை பணி தலைவர் மைக் ரியான் ”கொரோனாவை விட மோசமான ஆபத்துக்கு உலகம் தயாராக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.