Daily Horoscope
✕

ஆப்கானின் இடைக்கால பிரதமர்: இந்த முல்லா ஹஸன் அகுந்த்?

Written By Sugapriya Prakash
Updated: வியாழன், 9 செப்டம்பர் 2021 (11:17 IST)
ஆப்கானிஸ்தானின் புதிய இடைக்கால பிரதமராக முல்லா ஹஸன் அகுந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். யார் இவர் என்ற விவரம் பின்வருமாறு... 
 
ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்போது தாலிபான்கள் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஆப்கானிஸ்தானின் புதிய இடைக்கால பிரதமராக முல்லா ஹஸன் அகுந்த் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 
யார் இந்த முல்லா ஹஸன் அகுந்த்? 
 
இடைக்கால பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள முல்லா ஹசன் அகுந்த் முந்தைய தலிபான்கள் (1996-2001) ஆட்சியில் சக்தி வாய்ந்த தலைவராக இருந்துள்ளார். தலிபான்கள் ஆட்சியில் அவர் துணை பிரதமராகவும் வெளியுறவு மந்திரியாகவும் பொறுப்பு வகித்துள்ளார். 
 
முல்லா ஓமருடன் சேர்ந்து தலிபான் அமைப்பை நிறுவியவர்களில் இவரும் ஒருவராவார். இவர் முல்லா ஓமருக்கு மிகவும் நெருக்கமானவர். கடந்த 2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் பாமியான் நகரில் இருந்த உலகப் புகழ் பெற்ற புத்தர் சிலையை குண்டு வைத்து தகர்க்க மூலகாரணமாக இருந்தவர் இவர்.

எல்லாம் காட்டு

பெண் அதிகாரிக்கு மிரட்டல்!.. திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு..

திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 'சிப்காட் சுற்றுலா பூங்கா' திட்டம் அதிரடியாக ரத்து.. என்ன காரணம்?

மாநகராட்சிகள், நகராட்சிகள் ஊழியர்களூக்கு இனி ஆன்லைன் கவுன்சிலிங்.. இனி டிரான்ஸ்பர் ரொம்ப ஈசி...

தமிழ்நாடு திரைப்பட கல்லூரியில் ஏஐ ஆய்வகம்.. ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்க திட்டம்...

சூரிய, காற்றாலை மின்சாரத்தை கொள்முதல் செய்ய ஆவின் திட்டம்.. இனி கரண்ட் பில்லே இருக்காது...

அடுத்த கட்டுரையில்
Show comments