புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2019 (23:09 IST)

சீன அதிபர் இந்தியா வரும் நேரத்தில் சீனாவுக்கு சென்ற பாஜக பிரமுகர்

சீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை இந்தியா வர உள்ளது தெரிந்ததே. சீன அதிபரும், பிரதமர் மோடியும் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் முக்கிய ஆலோசனை செய்ய உள்ளனர். இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பை உலக நாடுகள் பெரிதும் எதிர்பார்க்கின்றன

இருநாட்டு தலைவர்கள் என்ன பேசுவார்கள்? என்ன முடிவு எடுப்பார்கள்? என்பதை அறிய உலகெங்கிலுமிருந்து முக்கிய மீடியாக்கள் சென்னையில் குவிந்துள்ளன. இந்த நிலையில் சீன அதிபர் வருகையை ஒட்டி சென்னை மற்றும் மகாபலிபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சீன அதிபர் வருகையின்போது எந்தவிதமான ஒரு சிறு அசம்பாவிதம் கூட நடந்து விடாதபடி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

சீன அதிபர் இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்திற்கு வருகை தருவது நிச்சயம் வரலாற்றில் உன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் ஒரு நிகழ்வாக இருக்கும் என்று கருதப்படுகிறது

இந்த நிலையில் சீன அதிபர் இந்தியாவிற்கு வருகை தரும் அதே நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் சீனாவுக்கு சென்றுள்ளார். சீன தலைநகர் ஷாங்காய் நகரத்தில் உள்ள அவர் அங்கு எடுத்த விதவிதமான புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் ஷாங்காய் நகரம்  பழமையும் புதுமையும் கலந்த நகரம் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது