சர்வரில் திடீர் கோளாறு.., அமெரிக்கா முழுவது முடங்கியது விமான சேவை!
சர்வரில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
சற்றுமுன் வெளியான தகவலின் படி அமெரிக்கா முழுவதும் 760 விமானங்கள் தாமதமாக கிளம்பியதாகவும் 90 மானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடங்கியுள்ளதாகவும் சர்வர் கோளாறு செய்யப்படும் வரை விமான சேவை முடக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது
தொழில்நுட்ப கோளாறு சரி செய்யும் முயற்சியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டு வருவதாகவும் இன்று இரவுகள் சரியாகிவிடும் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்கா முழுவதும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் விமான பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran