புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 28 ஏப்ரல் 2020 (11:35 IST)

வடகொரிய அதிபருக்கு என்ன ஆச்சுன்னு எனக்கு தெரியும், ஆனால் சொல்ல மாட்டேன்: டிரம்ப்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அவர்கள் இறந்து விட்டதாகவும் சீரியஸாக இருப்பதாகவும் பல்வேறு வதந்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் வட கொரிய அதிபர் நலமுடன் இருப்பதாக அண்டை நாடான தென் கொரியா தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய தகவல்களை தெரிவித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது இது குறித்த கேள்வி ஒன்றுக்கு ’வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அவர்களுக்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியும் என்றும் ஆனால் தற்போது அதை வெளியே சொல்ல முடியாது என்றும் கூறினார் 
 
மேலும் ஒரு கேள்விக்கு அவர் பதில் அளித்தபோது ’வட கொரிய அதிபர் நலமுடன் இருப்பதாக தான் நம்புவதாகவும் விரைவில் அது குறித்த நல்ல தகவல் வெளிவரும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தான் மட்டும் அமெரிக்க அதிபராக இல்லாமல் இருந்திருந்தால் அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே போர் மூண்டு இருக்கும் என்றும் இந்தப் போரை தன்னுடைய புத்திசாலித்தனமான பேச்சுவார்த்தையால் தடுத்ததாகவும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
 
இந்த நிலையில் வட கொரியா அதிபர் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விரைவில் வடகொரிய அரசு தரப்பிலிருந்து செய்திக்குறிப்பு வெளியாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது