புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (22:35 IST)

காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தான், சீனா கோரிக்கையை நிராகரித்தது ஐநா!

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து 370ஆவது பிரிவை சமீபத்தில் மத்திய அரசு நீக்கியது. இதுகுறித்த மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேறியதை அடுத்து குடியரசுத் தலைவர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இதனை அடுத்து வரும் அக்டோபர் மாதம் காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் அளிக்கப்பட உள்ளது 
 
இந்த நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான் மற்றும் சீனா நாடுகள் இது குறித்து விவாதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கேட்டுக்கொண்டது. காஷ்மீர் பிரச்சினையை சர்வதேச பிரச்சினையாக முன்னெடுக்க பாகிஸ்தானின் இந்த முயற்சி தற்போது தோல்வி அடைந்துள்ளது.
 
காஷ்மீர் விவகாரத்தில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து பாகிஸ்தான், சீனா விடுத்த கோரிக்கையை ஐநா பாதுகாப்பு கவுன்சில் சற்றுமுன் நிராகரித்துள்ளது. இதனை அடுத்து காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச விவகாரமாக மாற்ற பாகிஸ்தான் எடுத்த முயற்சி தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்றும் இந்திய மாநிலங்களில் உள்ள ஒரு பகுதியில் இந்திய அரசு நடவடிக்கை எடுப்பது என்பதை யாராலும் தட்டிக் கேட்க முடியாது என்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது