திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (09:02 IST)

ரஷ்யாவிடமிருந்து மீண்டும் சுதந்திரம் பெறுவோம்! – உக்ரைன் சுதந்திர விழாவில் அதிபர் பேச்சு!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 6 மாதங்களாகி விட்ட நிலையில் உக்ரைன் தனது சுதந்திர தினத்தை நேற்று கொண்டாடியுள்ளது.

சோவியத் யூனியனின் ஒரு அங்கமாக இருந்த உக்ரேன் 1991ம் ஆண்டு சோவியத்திலிருந்து பிரிந்து தனி நாடு அங்கீகாரம் பெற்றது. சோவியத் ரஷ்யாவிலிருந்து பிரிந்த தனி நாடான நாளை ஆண்டுதோறும் ஆகஸ்டு 24ம் தேதி உக்ரேன் சுதந்திர தினமாக கொண்டாடி வருகிறது.

ஆனால் தற்போது உக்ரேன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்த தொடங்கியுள்ள நிலையில் போருக்கு நடுவே தனது சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளது உக்ரேன்.

இந்த சுதந்திர தின உரையில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி “நீங்கள் எந்த ராணுவத்தை வைத்திருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் எங்கள் நிலத்தை மட்டுமே கவனிக்கிறோம். பயங்கரவாதிகளுடன் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம். எங்களுக்கு உக்ரைன் என்பது 25 பிராந்தியங்களும் ஒன்றினைந்த தேசம்தான். உக்ரைன் இறுதி வரை போராடும்” என கூறியுள்ளார்.